வடஇந்தியாவில் கடுங்குளிர் நிலவி வரும் நிலையில் ல் எங்கு பார்த்தாலும் புகைமூட்டம் போன்று காட்சியளிக்கிறது. எதிரே வரும் வாகனங்கள் கண்ணுக்கு தெரியாத அளவிற்கு பனிமூட்டம் தரைப்பகுதியில் படர்ந்துள்ளது.
டெல்லி மட்டுமின்றி ராஜஸ்தான், பஞ்சாப், அரியானாவிலும் பனிமூட்டம் அடர்ந்து காணப்படுகிறது. அந்தவகையில் பஞ்சாப்பின் அமிர்சரஸில் எதிரே உள்ளவர்களைப் பார்க்க முடியாத அளவிற்கு பனிமூட்டம் சூழ்ந்துள்ளது.
இந்நிலையில், உலக அதிசயங்களில் ஒன்றாக கருதப்படும் ஆக்ராவில் உள்ள தாஜ்மகாலை தங்கள் புகைப்படங்களில் தெரியவில்லை என சுற்றுவாசிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
தாஜ்மகாலை காண செல்லும் சுற்றுவாசிகள் அதனை புகைப்படம் எடுக்காது திரும்புவதில்லை. எப்போதும் புகைப்படம் எடுக்கும்போது பின்னணியில் தெரியும் தாஜ்மகால் பனிமூட்டத்தால் மறைந்தது கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.