மாமியாருக்காக ஈஸ்வரி மீண்டும் மனம் மாறி குணசேகரன் வீட்டில் இருக்க முடிவு செய்து விட்டார்.
எதிர்நீச்சல் தொடர்கிறது..
பிரபல தொலைக்காட்சியில் எதிர்நீச்சல் சீரியலின் இரண்டாம் பாகம் விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கின்றது.
ஆதி குணசேகரன் வீட்டில் உள்ள பெண்களுக்கு எதிராக செய்த கொடுமைகளை எல்லாம் போலீசிடமும் நீதிமன்றத்திலும் கூறி விட்டனர். இதன் காரணமாக அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனை தொடர்ந்து வீட்டில் உள்ள பெண்கள் நால்வரும் அவர்களுக்கு பிடித்த வாழ்க்கையை வாழ ஆரம்பித்துள்ளனர்.
வீட்டின் சமையலறையில் மருமகள்களின் வாழ்க்கையை முடிக்க நினைத்த மாமியாரும் அடங்கி விட்டார்.
மருமகள்களின் செயலால் ஆத்திரமடைந்த ஞானமும், கதிரும் அவர்களிடம் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அத்துடன் பெயில் கிடைக்க 6 மாதம் போராடி வருகிறார்கள்.
இந்த நிலையில் மாமியாரின் அழைப்பை ஏற்று ஈஸ்வரி மறுபடியும் குணசேகரன் வீட்டிற்கு வருகிறார்.
வந்தவர் விசாலாட்சியின் அழுகையை பார்த்த பின்னர் மனம் மாறி குணசேகரன் வீட்டிலேயே இருக்கிறார்.
அத்துடன், மருமகள்களின் செயலால் கடுப்பான ஆதிரை,“ இங்க நீங்கள் எல்லாம் செய்கின்ற நாடகத்தை நானும் பாக்கிறேன். நான் தான் கடந்த 3 நாட்களாக அம்மாவை பார்த்து கொண்டிருக்கிறேன்..” என கத்துகிறார்.
அதற்கு விசாலாட்சி,“ போதும் நிறுத்து, அவர்களை எதுவும் பேச வேண்டாம்..” என மருமகள்களுக்கு ஆதரவு வழங்குகிறார்.
இதனை தொடர்ந்து அம்மாவின் மாற்றத்தை எதிர்பார்த்திருந்த தர்ஷினிக்கு ஈஸ்வரியின் முடிவில் உடன்பாடு இல்லை. இதனால் அம்மாவை அழைத்து கோபமாக பேசுகிறார்.
இப்படியாக இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.