தமிழகத்தின் வடக்கு பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு காற்று அதிகமாக வீசும் என வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் நேற்று இரவு முதல் மெல்ல மெல்ல கரையைக் கடக்கத் தொடங்கியது.
இரவு 9 மணி முதல் லேசாக தொடங்கியது காற்று அதிகாலை 3 மணிக்கு கிட்டத்தட்ட முடிவுக்கு வந்தது. அதன்பின்னர் லேசான காற்றே வீசியது. மாண்டஸ் புயலால் சென்னையின் பல்வேறு பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்தன.
காற்றின் வேகம் அதிகரிப்பு
மின் கம்பங்கள், சிக்னல் கம்பங்கள் பாதிக்கப்பட்டன. கோவளம் கடற்கரை பகுதியில் இருந்த கடைகள் காற்றின் வேகத்தில் சின்னாபின்னமாகின.
கிட்டத்தட்ட புயல் தற்போது கடந்துவிட்ட நிலையில் அடுத்த 2 நாட்களுக்கு காற்றி அதிகமாகவே வீசும் என தமிழ்நாடு வெதர்மேன் குறிப்பிட்டுள்ளார்.
”புயல் கரையை கடந்த பகுதிகளில் தான் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும்.
வடமேற்கு பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு காற்று அதிகமாக வீசும்எதிர் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என கருதப்படுகிறது. மேலும் வலுவிழுந்த மரங்கள் காற்றின் வேகத்தில் விழலாம் எனவும் அவர் கூறியுள்ளதாக தமிழக தகவல்கள் கூறுகின்றன.