இலங்கையில் மாணிக்க கற்கள் பதிக்கப்பட்ட புத்தர் சிலையை இரண்டரை மில்லியன் ரூபாவிற்கு விற்பனை செய்ய முற்பட்ட ஆயுர்வேத வைத்தியர் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பளபளப்பான கற்களைக் கொண்ட இந்த பகோடாவை புதையல் ஒன்றில் இருந்து பெற்றதாகக் கூறி குறிப்பிட்ட நபருக்கு விற்பனை செய்யச் சென்ற போதே அவர்களை மாத்தறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மற்றும் வழக்குப் பொருட்கள் இன்று (30) மாத்தறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக மாத்தறை பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.