தீவக கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் தரம் 4ல் கல்வி கற்கும் பெண் மாணவி மீது பாடசாலை அதிபர் தடிகளால் முதுகில் கடுமையாக தாக்கிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
குறித்த சம்பவம் நேற்றையதினம் புதன்கிழமை பாடசாலையில் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.
மேலும், பாடசாலை ஆசிரியர் ஒருவர் குறித்த சம்பவத்தை வெளியில் சொல்லக்கூடாது என அச்சுறுத்தியுள்ளதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.
குறித்த சம்பவம் தொடர்பில் வேலணை பிரதேச செயலரை தொடர்பு கொண்டு கேட்டபோது குறித்த சம்பவம் தொடர்பில் தமது உத்தியோகத்தர்களுக்கு முறைப்பாடு ஒன்று கிடைக்கப்பெற்றதாக தெரிவித்தார்.