இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ Mahinda Rajapaksa அரசியல் அரங்கில் இல்லாதது தொடர்பில் நாடாளுமன்றத்தில் பல விவாதங்கள் இடம்பெற்று வருகின்றன.
கடந்த வாரம் பல முக்கிய சட்டமூலங்களை நிறைவேற்ற அரசாங்கம் நடவடிக்கை எடுத்த போதிலும், அந்த நிகழ்வுகள் எதிலும் மஹிந்த ராஜபக்ஷ பங்கேற்கவில்லை.
இதனையடுத்து அவருக்கு என்ன நடந்தது என உறுப்பினர்கள் பலர் பலரிடம் கேட்டறிந்துள்ளதாக தெரியவருகிறது.
எனினும், மஹிந்த ராஜபக்ஷ பகிரங்கமாக வெளியில் வராத போதிலும், விஜேராம மாவத்தையில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் பல்வேறு அரசியல் கலந்துரையாடல்களில் ஈடுபட்டு வருவதாக தெரியவந்துள்ளது.