இலங்கையில் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளானவர்களுக்கு வேட்புமனுக்களை வழங்க வேண்டாம் என முன்னாள் ஜனாதிபதியும், பொதுஜன பெரமுனவின் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ (Mahinda Rajapakasa) தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பொதுஜன பெரமுன தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்களிடம் விண்ணப்பங்களை கோருவதற்கு தீர்மானித்துள்ளதால் இந்த தீர்மானத்தை அவர் எடுத்துள்ளார்.
இதேவேளை இந்த விண்ணப்பங்களை பரிசீலிக்கும் போது, மக்களுடன் இணைந்து செயற்பட்டுள்ளாரா? கல்வியில் முதன்மை பெற்றுள்ளாரா போன்ற விடையங்களை அவதானிக்கும்மாறும் அறிவுறித்தியுள்ளார்.
மேலும் திறமையான இளம் பிரதிநிதிகளை முன்வைப்பதில் பொதுஜன பெரமுன அதிக கவனம் செலுத்தியுள்ளமையும் குறிப்பிடதக்கது.