வெளிநாடு செல்வதற்கு மஹிந்த கொடிதுவக்கு தடை விதித்து கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நேற்றைய தினம் (12-01-2024) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினிப் பிரிவு சார்பில் ஆஜராகிய பிரதி சொலிசிட்டர் ஜெனரல் பீரிஸ் முன்வைத்த விடயங்களை பரிசீலித்த கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே இந்த உத்தரவைப் வழங்கியுள்ளார்.
இதேவேளை, பிரதி சொலிசிட்டர் ஜெனரல் விடுத்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதவான், குறித்த நபரின் வங்கிக் கணக்குகள் தொடர்பான அறிக்கையை பெற்றுக்கொள்ளுமாறும் உத்தரவிட்டுள்ளார்.