பிராந்தியத்தில் உள்ள ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் பெற்றோல் மற்றும் டீசல் விலைகள் குறைவாகவே காணப்படுவதாக மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் டுவிட்டரில் இட்டுள்ள பதிவில்,
எரிபொருள் விலை திருத்தம் நீண்ட காலத்திற்கு முன்பே செய்யப்பட்டது. இலங்கையில் ஒரு லீற்றர் பெற்றோல் 0.88 அமெரிக்க டொலர்களுக்கும், டீசல் லீற்றர் 0.60 அமெரிக்க டொலர்களுக்கும் விற்பனை செய்யப்படுவதாக மத்திய வங்கியின் ஆளுநர் சுட்டிக்காட்டியுள்ளார்.