யாழ். வட்டுக்கோட்டையில் உள்ள பகுதியொன்றில் மறைந்த நடிகர் விஜயகாந்த் அவர்களின் 31வது நாள் நினைவேந்தல்அனுஷ்டிக்கப்பட்டது.
இந்த நினைவுதினம் நேற்றைய தினம் (30-01-2024) பொன்னாலை தெற்கு பகுதியில் உள்ள கிராம மக்களால் அனுஷ்டிக்கப்பட்டது.
இதன்போது அன்னாரின் திருவுருவப் படத்திற்கு மலர்மாலை அணிவித்து, மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
அஞ்சலி நிகழ்வின் பின்னர் அன்னதான நிகழ்வும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.