ஒரு மருத்துவரின் 5 மனைவிகளுக்கு மற்றுமொரு பெண் மருத்துவரின் 6 கணவன்மார்களுக்கும் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகளின் ஒன்றியத்தின் தலைவர் மருத்துவர் ருக்ஸான் பெல்லன தெரிவித்துள்ளார்.
கொழும்பு நாராஹென்பிட்டியில் உள்ள அபயராம விகாரையில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இந்த தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன.
மருத்துவர்கள் தனது குடும்பத்தின் உறுப்பினர்கள் எனக் கூறி 13 ஆயிரம் பேருக்கு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைத்து தடுப்பூசிகளை வழங்கியுள்ளனர். அத்துடன் கொழும்புக்கு அருகில் உள்ள மேலும் சில வைத்தியசாலைகளில் இப்படியான வகையில் தடுப்பூசிகளை வழங்கியுள்ளனர்.
இப்படி இருக்கும் போது உணவட்டுன வைத்தியசாலையில் மாத்திரம் விசாரணைகளை நடத்துவது என்ன சட்டம். விசாரணை நடத்தப்பட வேண்டுமாயின் அனைத்து இடங்களிலும் விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் மருத்துவர் பெல்லன குறிப்பிட்டுள்ளார்.