மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வடமாநில இளைஞன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை சேத்துப்பட்டில் உள்ள மேத்தா மருத்துவமனையில் கணைய பாதிக்கப்பட்ட 9 வயது சிறுமி சிகிச்சை பெற்று வந்தார்.
அப்போது சிறுமியின் தாய் மருந்து வாங்க சென்றிருந்த போது அங்கு வந்த மருத்துவமனை உணவக ஊழியரும் உத்திரப்பிரதேச மாநிலம் காசிப்பூரைச் சேர்ந்த இளைஞன் மோனா ராம் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
இந்நிலையில், சிறுமி சத்தமிட்டதையடுத்து மோனோ ராம் அங்கிருந்து வெளியேறிவிட்டார்.
தாய் வந்தவுடன் நடந்ததைக் கூறி சிறுமி அழவே , மருத்துவமனை நிர்வாகத்திடம் புகாரளித்தார்.
இதையடுத்து மருத்துவமனை நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் அங்கு வந்த கீழ்ப்பாக்கம் மகளிர் பொலிஸார் மோனோ ராமை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.