இளம் நடிகை மமிதா பைஜுவை அடித்ததாக உருவான சர்ச்சைக்கு இயக்குநர் பாலா விளக்கம் கொடுத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் இருக்கும் பிரபலமான இயக்குநர்களில் ஒருவர் தான் இயக்குநர் பாலா.
இவர் இயற்கையில் நடக்கும் விடயங்களை கொண்டு படம் எடுப்பதில் சிறந்தவராக பார்க்கப்படுகிறார்.
அந்த வரிசையில், இவர் இயக்கத்தில் தயாராகி இருக்கும் “வணங்கான்” திரைப்படம் இன்னும் 11 நாட்களில் வெளியாகவுள்ளது. இந்த படத்திற்கு பிரமோஷன் பணிகள் தற்போது நடந்து கொண்டிருக்கிறது.
அப்போது இளம் நடிகையான மமிதா பைஜுவை அடித்ததாக வெளியான செய்திக்கு விளக்கம் கொடுத்துள்ளார்.
அதில், “மமிதா பைஜு என் மகள் மாதிரி. அவளைப் போய் எப்படி அடிப்பேன். இன்னொன்று பெண் பிள்ளையை யாராவது அடிப்பார்களா? மும்பையில் இருந்து வந்த மேக்கப் ஆட்கள், இவருக்கு மேக்கப் போட்டுவிட்டார்கள்.
எனக்கு மேக்கப் பிடிக்காது என்று அவர்களுக்கு தெரியாது. மேக்கப் போடாதீர்கள் எனக்கு பிடிக்காது என்று மமிதா பைஜுவுக்கும் சொல்ல தெரியவில்லை.
ஷாட் ரெடி என்றவுடன் மேக்கப்போடு வந்துவிட்டார். யார் மேக்கப் போட்டது? என்று கையை ஓங்கினேன். உடனே அடித்துவிட்டார் என செய்தி வந்துவிட்டது. உண்மையில் இதுதான் நடந்தது” என பேசியுள்ளார்.
இந்த செய்தி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பேசப்பட்டு வருகின்றது.