அமைச்சர்கள் மனுஷ நாணயக்கார மற்றும் ஹரின் பெர்னாண்டோ ஆகியோருக்கு விதிக்கப்பட்டிருந்த தடை ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவால் நீக்கப்பட்டு மீண்டும் செயற்குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த தீர்மானம் இன்றைய தினம் (02-08-2023) ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட செயற்குழுக் கூட்டம் இடம்பெற்ற போதே மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த சந்திப்பு தலைவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க Ranil Wickremesinghe தலைமையில் சிறிகொத்தவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.