தமிழகத்தில் வீட்டுக்குள் புகுந்து மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை துஷ்ப்பிரயோகம் செய்த நபரை, அந்த இடத்திலிருந்து நகர முடியாத அளவிற்கு நாய் பிடித்து வைத்திருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
தமிழக மா வட்டம் கோவையில் உள்ள செல்வபுரம் என்ற ஊரில் கடந்த ஏப்ரல் 3-ஆம் திகதி இந்த சம்பவம் நடந்துள்ளது பாதிக்கப்பட்ட பெண் (30) மனநலம் குன்றியவர் என்பதால், அவரது குடும்பத்தினர் அவரை வீட்டிற்கு பக்கத்திலேயே ஒரு கூடாரம் அமைத்து தங்க வைத்துள்ளனர் மேலும், தங்கள் வீட்டிலிருந்து கூடாரத்திற்கு மின் இணைப்பு கொடுத்திருந்தனர்
சம்பவத்தன்று இரவு, அதே பகுதியில் தில்லை நகரைச் சேர்ந்த திலீப் குமார் (29), மனநலம் பாதிக்கப்பட்ட அப்பெண் தனியாக இருப்பார் என்று அறிந்துகொண்டு கூடாரத்துக்குள் நுழைந்துள்ளார்
பின்பு, தனக்கு என்ன நடக்கிறது என்பது கூட தெரியாமல் இருந்த அப்பெண்ணை துஷ்பிரயோகம் செய்துள்ளார் அதனை தனது மொபைல் போனில் விடியோவாகவும் பதிவு செய்துள்ளார்
பின்னர் அங்கிருந்து தப்பிச்செல்ல முயன்றபோது, அப்பெண்ணின் குடும்பத்தினர் வளர்க்கும் நாய் ஒன்று திலீப் குமாரின் காலை கடித்து, பேன்ட்டை விடாமல் பிடித்து வைத்துள்ளது
திலீப் குமார் கத்தவும் முடியாமல், என்ன செய்வது என்றும் தெரியாமல் இருந்த அந்த நேரத்தில், கூடாரத்தில் மின்விளக்கு அணைந்து இருப்பதைப் பார்த்து சந்தேகப்பட்ட குடும்பத்தினர் வந்து பார்த்துள்ளனர்
அப்போது, நாயிடம் சிக்கி இருந்த நபரை வசமாக பிடித்து, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் காவல் துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர் பின்பு திலீப் குமாரை விசாரித்த பொலிஸார், அவரது மொபைல் போனை வாங்கி சோதனை செய்துள்ளனர் அப்போது, அப்பெண்ணை அவன் படம் பிடித்து வைத்திருந்தது தெரியவந்தது
மேலும், அதேபோல் மற்றோரு வீடியோ இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பொலிஸார், விசாரித்ததில் திலீப் குமார் ஏற்கெனெவே தனியாக இருந்த இப்பெண்ணை துஷ்பிரயோகம் செய்துள்ளார் என்பதைக் கண்டுபிடித்தனர்
அவர் யாருக்கும் சந்தேகம் வராமல் இருக்க, தனது வாகனத்தை அப்பெண்ணின் வீட்டிலிருந்து 200 மீட்டர் தள்ளி நிறுத்திவிட்டு வந்து இந்த காரியங்களை செய்துள்ளார்
திலீப் குமார் மீது வழக்குப்பதிவு செய்துள்ள பொலிஸார், நீதிமன்ற காவலில் வைத்து விசாரித்து வருகின்றனர் முதற்கட்ட விசாரணையில், அவர் பாதிக்கப்பட்ட பெண்ணை ஏற்கெனவே 2 முறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் என்பது தெய்வந்துள்ளது