நாட்டின் பல பகுதிகளில் உள்ள மதுபானக் கடைகளுக்கு முன்பாக கணிசமான அளவு நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனது.
தமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டு நாளையும் நாளை மறுதினமும் நாடுமுழுவதும் மதுபானசாலைகளை மூட அரசாங்கம் தீர்மானித்தமையே இதற்கு காரணம்.
அதேவேளை பண்டிகைக் காலங்களில் சட்டவிரோத மதுபானங்களை சுற்றிவளைக்கும் நோக்கில் கலால் திணைக்களம் விசேட நடவடிக்கையொன்றையும் ஆரம்பித்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.