கல்வியே எமது குழந்தைகளின் மூலதனம்!!
01.02.2025
இரண்டாவது ஆரம்பக்கல்வி நிலையம் ஆரம்பித்து வைக்கப்பட்டது
மணல் சேனை என்னும் கிராமத்தில் உதவிக் கல்வி அதிகாரி அவர்களின் தலைமையில் இடம் பெற்றது. அத்துடன் மாணவர்களுக்கு இன்றய நாளில் கல்வி உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.மேலும் மழலைகளின் கலை நிகழ்வுகளும் விருந்தினர்களின் சிறப்புரைகளும் இடம்பெற்றது இந்நிகழ்வுக்கு நிதி உதவி வழங்கியவர் உதவும் இதயங்கள் நிறுவனத்தின் இயக்குனர் திரு ம.சிறிரஞ்சன் அவர்கள் வழங்கியிருந்தார். இந்த கட்டிடம் திருத்துவதற்கு நிதி உதவி வழங்கிய கயல்புரோன் கந்த சுவாமி கோவில் (பாட் பிறிக்ஸ்சால் Germany) நிர்வாக உறுப்பினர்களுக்கும் முருக பக்தர்களுக்கும் மிக்க நன்றி. இந்தமாதத்தில் இருந்து உதவும் இதயங்கள் நிறுவனம் ஆசிரியருக்கான கொடுப்பனவை வழங்கும். எமது அமைப்பு கல்விக்கு முன்னுரிமை கொடுத்து நகர்ந்து வருகின்றது எம்மோடு இணைந்து பயணிக்கும் அன்பான உறவுகள் அனைவருக்கும் நன்றி






























