இலங்கை படையினருக்கும் வெளிநாட்டுப் படையினருக்கும் இடையிலான போர்ப் பயிற்சி மட்டக்களப்பு – தொப்பிகலை மலைப்பகுதியில் இடம்பெற்று வருகிறது.
நீர்க்காகம் போர்ப் பயிற்சியின் 11ஆம் ஆண்டு பயிற்சிகளே இவ்வாறு இடம்பெறுகின்றது.
குறித்த பயிற்சிகள் கடந்த 22ஆம் திகதிமுதல் வரும் 29ஆம் திகதிவரை நடைபெறும் எனவும் தெரியவருகின்றது.
இதேவேளை எந்த நாட்டின் படையினர் பயிற்சியில் ஈடுபடுகின்றனர் என்பது தொடர்பில் எந்த விவரமும் வெளியாகவில்லை.