மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாழங்குடாவில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் இரு சிறுவர்கள் உட்பட மூவர் காயமடைந்துள்ளனர்.
கல்முனையில் இருந்து மட்டக்களப்பிற்க்கு வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் அமைக்கப்பட்ட மதகுடன் மோதுண்டு பாதையை விட்டு தடம்புரண்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது கார் செலுத்துணர் மற்றும் காரில் பயணம் செய்த இரு சிறுவர்களும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.