மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணை தலைவரும், அண்ணாநகர் தொகுதி வேட்பாளரான பொன்ராஜூக்கு கொரோனா தொற்று உறுதியானது.வேளச்சேரி மக்கள் நீதி மய்யம் வேட்பாளரும், கட்சியின் பொதுச் செயலாளருமான சந்தோஷ் பாபுவுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து தற்போது அவர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் தற்போது பொன்ராஜூக்கும் தொற்று உறுதியானதால் கட்சியினர் கலக்கமடைந்துள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீடு நிகழ்வின் போது பொன்ராஜ் கமல்ஹாசனுடன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தனக்கு தொற்று உறுதியானதை சமூக வலைதள பதிவில் உறுதிப்படுத்திய பொன்ராஜ், தொடர்ந்து சோசியல் மீடியா, டிவி, யூடியூப் மூலம் தமிழக மக்களை சந்திப்பேன் என்று உறுதியளித்துள்ளார்.
மேலும், ZOOM MEETING மூலம் நான் அண்ணா நகர் தொகுதி மக்களோடு கலந்துரையாட ஏற்பாடுகள் கூடிய விரைவில் செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.