பிரதமர் மகிந்த ராஜபக்ச புதிய அரசமைப்பு திருத்தங்கள் குறித்த யோசனைகளை சமர்ப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பொதுமக்களிற்கு பொறுப்புக்கூறும் அரசாங்கத்தினை உருவாக்கவேண்டும் என பல தரப்பினரும் விடுத்துவரும் நிலையில் அவர்களது வேண்டுகோள்கள் குறித்து பிரதமர் தனது கவனத்தை செலுத்தியுள்ளார்.
நிறைவேற்றுத்துறை சட்டவாக்கம் நீதித்துறை ஆகியவை தொடர்பில் அரசமைப்பு மாற்றங்களை மேற்கொள்வது தொடர்பான யோசனையை பிரதமர் அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளார்.
மேலும் மக்களின் அபிலாசைகளை பூர்த்திசெய்வதற்கு திருத்தப்பட்ட அரசமைப்பு கருவியாக விளங்கும் எனவும் பிரதமர் எதிர்பார்க்கின்றார்