தமிழகத்தில் தடுப்பணையில் நடந்து சென்ற அக்கா தம்பி என 3 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளது சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டம் செந்துறையை அடுத்த மணப்பத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சுதாகர், ஜெயசீலன் என்ற இரண்டு சகோதரர்கள் கூலி வேலை செய்து வந்துள்ளனர்.
இதில் சுதாகருக்கு சுடர்விழி(7) என்ற மகளும், ஜெயசீலனுக்கு சுருதி(10), ரோகித்(7) என 2 குழந்தைகளும் உள்ளனர்.
இவர்களது கிராமத்திலிருந்து இடுகாடு செல்லும் வழியில் உள்ள ஓடையில் தடுப்பணை ஒன்று கட்டப்பட்டுள்ளது. குறித்த தடுப்பணை மிகவும் சேதமடைந்த நிலையில் இருந்துள்ளது.
ஓடைக்கு கீழே ஆழமுள்ள குழியில் தண்ணீர் தேங்கியிருந்துள்ள நிலையில், மூன்று குழந்தைகள் அவ்வழியே சென்ற போது சேற்றில் வழுக்கி நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
பின்பு சிறுவர்களின் உடலை மீட்ட பொலிசார் பிரேத பரிசோதனை செய்வதற்கு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளதோடு, வழக்கு பதிவுசெய்து தீவிர விசாரணை மேற்கொண்டும் வருகின்றனர்.