நாட்டில் பெரும் பொருளுதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். பால் மா உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் உட்பட பல பொருட்களின் விலைகள் சடுதியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் சமையல் எரிவாயு மற்றும் எரிபொருளை பெறுவதற்காக மக்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கிளிநொச்சி மருத்துவர் பிரியந்தினி தனது முகநூலில் பிரதமர் மகிந்த தலைகீழாக தொங்கும் புகைப்படம் ஒன்றினை பதிவிட்டுள்ளார்.
அத்துடன் அதில் , நாட்டுல உள்ள எல்லோருக்கும் இப்ப இது அவசியமாகிட்டு சார், உங்கள் வழிநடத்தலுக்கு நன்றி சார் என பதிவிட்டுள்ள நிலையில், அப்பதிவு வைரலாகியுள்ளது.