பேஸ்புக் மூலம் பழகிய காதலனுடன் திருமணம் நடக்கவிருந்த நிலையில், நள்ளிரவில் மண்டபத்தில் இருந்து தப்பிய மணப்பெண் மற்றோரு காதலனுடன் காவல் நிலையத்தில் தஞ்சம் கோரியுள்ள சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.
வள்ளுவர் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த அம்மு என்பவர் தனியார் ஷோரூமில் பணிபுரிந்து வந்துள்ள நிலையில் திருநின்றவூரைச் சேர்ந்த கார்த்திக் என்ற இளைஞரிடத்தில் பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இருவரும் நான்கு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ள நிலையில் இரு வீட்டாரும் திருமணத்துக்கு சம்மதித்த நிலையில் இன்று திருமணம் நடக்கவிருந்தது.
காலையில் திருமணம் நடக்கவிருந்த நிலையில், நள்ளிரவில் மணப்பெண் அம்மு மண்டபத்தில் இருந்து மாயமானார்.
அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அருகில் இருந்த சிசிடிவி கேமராவை ஆராய்ந்த போது மணப்பெண் அம்மு ஆட்டோ ஒன்றில் வேறொரு இளைஞருடன் சென்றது தெரியவந்தது.
அம்மு நிஷாந்த் என்ற இளைஞருடன் கிண்டி காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தார்.
கார்த்திக், நிஷாந்த் இருவரையும் ஒரே நேரத்தில் காதலித்ததாகவும், கார்த்திக்கை திருமணம் செய்ய தனக்கு பிடிக்காததால் நிஷாந்துடன் சேர்த்து வைக்க போலீஸாரிடத்தில் அம்மு வேண்டுகோள் விடுத்தார்.