பொதுவாக நாம் தினமும் செய்யும் வேலைகள் போல் தலை சீவுதலும் அவசியம்.
இந்த முறையை சரியாக செய்பவர்களுக்கு தலைமுடி தொடர்பான பிரச்சினைகள் வருவது குறைவாக இருக்கும்.
தலைமுடி பராமரிப்பில் இதுவும் ஒன்றாக பார்க்கப்படுகின்றது. சிலர் தலைமுடி உதிர்வு அதிகமாக ஏற்படுவதால் தலைமுடி சீவுவதில் பயம் கொள்வார்கள்.
ஆனால் தினமும் தலைமுடியை சீவுவது தலைமுடிக்கு மட்டுமல்ல சில அறிவியில் நன்மைகளும் இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
அந்த வகையில், ஒருவர், காலை ஒருமுறை, இரவு தூங்கும் முன் ஒருமுறை என சராசரியாக நாளொன்றுக்கு 2 முறை தலைமுடியை சீவ வேண்டும் எனவும் கூறுகின்றனர்.
இப்படியெல்லாம் செய்வதை தாண்டி பெண்கள் தலைமுடியை சீவி பின்னல் போடுவதால் ஏகப்பட்ட நன்மைகள் கிடைப்பதாக கூறப்படுகின்றது. இது தொடர்பில் தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
பின்னலில் மறைந்திருக்கும் மருத்துவம்
1. நீண்ட கூந்தல் கொண்ட பெண்கள் ஒரு நாளை 3 தடவை சரி தலைமுடி சீவலாம். இதனால் தலைமுடியில் இருக்கும் சிக்கல் குறைந்து முடி பளபளப்பாக இருக்கும்.
2. சிக்கல்களை எடுத்து தலைமுடியை ஜடை போடுவதால் மேலும் சிக்கல்கள் முடியில் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவாக இருக்கும்.
3. பெண்களின் தலைமுடியில் இயற்கையாகவே ஈரழிப்பு மற்றும் பசைத்தன்மை இருக்கும். நாம் கூந்தலை கட்டாமல் அப்படியே விடுவதால் இதிலிருக்கும் ஈரப்பதன் காய்ந்து போய் விடுகிறது.
4. தலைமுடியை அவிழ்த்து விடுவதால் சூரியஒளி, காற்று மற்றும் சுற்றுச்சூழல் மாசுகளால் முடிக்கு அதிகமாக பாதிப்பு ஏற்படும். இதனால் முடி வெடிப்பு, உதிர்வு, வளர்ச்சியின்மை ஆகிய பிரச்சினைகள் ஏற்படும்.
5. சிலரின் தலைமுடியை பார்க்கும் பொழுது முனியில் வெடிப்புகள் காணப்படும். இது தலைமுடியை அவிழ்த்து விடுவதால் தான் ஏற்படுகின்றது.
6. சுருள்முடி கொண்டவர்கள் கூந்தலை பின்னிக்கொள்வதால் தலைமுடி வறட்சி அடையாமல் ஆரோக்கியமாக பாதுகாத்துக் கொள்ளலாம்.
7. காலையில் எழுந்தவுடன் எண்ணெய் வைத்து ஜடை போடுவதால் பழைய முடி, இறந்த சரும செல்கள், ஹேர் ப்ராடக்டின் மிச்சங்கள், அழுக்கு அகற்றப்படுகின்றது.
8. பின்னல் போட்டு தலைமுடியை அலைபாய விடாமல் கட்டுக்குள் வைப்பதால் புத்துணர்ச்சியாகவும், அடர்த்தியாகவும் காட்சி கொடுக்கும்.