முகம் எப்படி இருந்தாலும் பெரும்பாலான ஆண்கள் அதை பற்றி கவலை கொள்வதில்லை. ஆனால் பெண்கள் அப்படி கிடையாது. தங்கள் முகம் எப்போதும் அழகாக இருக்க வேண்டும் என்று மெனக்கெடுவார்கள். நம்முடைய முகமும் திரைப்பட நாயகியரை போன்று மின்ன வேண்டும் என்று ஆசைப் படுவார்கள். அதில் ஒன்றும் தவறில்லை. அப்படி இருந்தால் தானே ஆண்கள் எப்போதும் பெண்களின் முகத்தை ரசித்துக்கொண்டே இருக்க முடியும். பெண்கள் எப்படி திரைப்பட நாயகி போல மின்னும் முகத்தை பெறுவது என்பதை இங்கு காணலாம்.
சன்ஸ்கிரீன் பயன்டுத்தினால் சூரிய ஒளிக்கதிர்கள் மற்றும் அதனுடைய வெப்பம் நம் முகத்தை தாக்காதவாறு பார்த்துக்கொள்ளலாம். தினமும் காலையில் வெளியே செல்வதற்கு முன் இதை பயன்படுத்தலாம். தினமும் சரியாக 7 முதல் 8 மணி நேரம் தூங்குவது அவசியமாகும். சரியாய் தூங்கினாலே அடுத்த நாள் காலை முகம் தெளிவாகவும் பொலிவாகவும் காணப்படும். உங்கள் தோலின் வகையை கண்டறிந்து அதற்கேற்றவாறு கிரீம் பயன்படுத்துங்கள். முடிந்தவரை இயற்கையான பொருட்களை உபயோகியுங்கள். இரசாயன கலவை கொண்ட கிரீம் பயன்படுத்தினால் அது சருமத்துக்கு தொல்லை தரும். இது மட்டுமல்லாது நீங்கள் பயன்படுத்தும் சோப்பு மற்றும் ஷாம்பு போன்றவற்றையும் சரியாக தேர்ந்தெடுக்க வேண்டும். இதை வைத்தே உங்களின் முக அழகு தீர்மானிக்கப்படுகிறது.
தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள். இது உங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி உங்களை மகிழ்வாக வைத்திருக்க உதவும். சரும அழகுக்கு உணவுப்பழக்கமும் முக்கியமாகும். அதிக எண்ணெய் சேர்க்கப்பட்ட உணவுகள் மற்றும் புளித்த உணவுகளை தவிர்க்க வேண்டும். உப்பு, காரம் , சர்க்கரை போன்றவற்றையும் சீரான அளவில் பயன்படுத்த வேண்டும். போதுமான அளவு நீர் குடியுங்கள். இது உங்களை புத்துணர்ச்சியுடன் செயல்பட உதவி புரிகிறது.