ஒரு ஆணுக்கு பெண்ணை பார்த்த உடனே கிளர்ச்சி ஏற்பட்டுவிடும். ஆனால் பெண்ணுக்கு அப்படி அல்ல. ஆண்களின் மூளை புறத்தூண்டல் காரணமாக சஞ்சமடைகிறது. ஆனால் பெண்களுக்குள் அகத்தூண்டல் நடந்தால் மட்டுமே கி ளர்ச்சி ஏற்படும். இயற்கையின் படைப்பே அப்படித்தான். எந்த ஆணும் ஜன்னல் வைத்து ஷர்ட் போட விரும்புவது இல்லை. உடல் வளைவுகள் தெரியும் படியான இறுக்கமான ஆடைகள் அணிவதில்லை. ஏன் பெண்களுக்கு மட்டும் இப்படி ஆடை வடிவமைக்கிறார்கள் என்றால், அது முழுக்க முழுக்க எதிர் பா லினத்தவரை கவர மட்டுமேயாகும்.
ஆண்களை பார்க்க வைக்க வேண்டும் என்பதற்காகவே ஒரு சில ஆடைகள் வடிவமைக்கப்பட்டு வியாபாரமாக்கப்பட்டன. உளவியல் ரீதியாக ஆண்களிடம் இருக்கும் மைனஸ், அவர்களுக்கு சாதகமாக மாறியது. பெண்களின் அங்கங்கள் வெளியே தெரியும் படி ஆடை வடிவமைக்கப்படுவதைத் தாண்டி, இயற்கையே அவர்களை அப்படித்தான் உருவாக்கி இருக்கிறது. ஒரு ஆண் மகனை இப்படி பார்க்க கூடாதென்று யாரும் பெண்ணுக்கு சொல்லிக்கொடுப்பதில்லை. ஆனால் ஒரு பெண்ணை எப்படி தவறாக பார்க்க முடியும் என்பதை, எல்லா கன்றாவி சினிமாவிலும் காட்டப்படுகிறது.
எல்லாம், எதிர் பாலின கவர்ச்சியை வைத்து, கல்லா கட்டும் வியாபாரம். ஊடகங்கள தரும் சேதிகள் அனைத்தும் உண்மை என்று நம்பி விடாதீர்கள். இப்போது எல்லாம் விளம்பர யுக்தியாகிவிட்டது. இந்தியாவில் அது கா மத்தை தூண்டுகிறது. அமெரிக்காவில் டீன் ஏஜ் வந்த குழந்தைகள் பீச் பார்ட்டி வைக்கிறார்கள். இதற்கு பெற்றோரே கொண்டுபோய் விடுகின்றனர். அங்கே ஒரு இரவு முழுக்க இந்த இளசுகள் சும்மாவா இருக்கும்? இதுவெல்லாம் கூடிய சீக்கிரம் இங்கும் வந்து, அப்புறம் க வர்ச்சி என்ற வார்த்தை இல்லாமல் போய் விடும்.
அந்த நிலையை நோக்கியே நம்முடைய ஆடை கலாச்சாரம் சென்று கொண்டிருக்கிறது. ஒரு காலத்தில், பெண்களுக்கு கொஞ்சம் சேலை முந்தானை விலகினாலே, தானாகவே கை சென்று மூடிக்கொள்ளும் கலாச்சாரம் நம்முடையது. அப்படியான கலாச்சாரத்தில் வந்த நம்மை, இன்றைக்கு கிழிந்த ஆடையையும், உடல் அங்கங்கள் தெரியும்படியான ஆடையையும் அணிய வைத்துள்ளது இந்த வியாபார உலகம். இன்னைக்கு டிஸைன் செய்யப்படும் பெரும்பாலான ஆடைகளை எடுத்துப்பாருங்கள், பெண்ணின் அங்கம் தெரியும் படியே வடிவமைக்கப்பட்டிருக்கும்.