உதவித்தொகை 200,00 யூரோ
அமரர் ஆறுமுகம் குணலிங்கம் அவர்களின் 2ம் ஆண்டு திதி நினைவாக..
புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள வள்ளுவர் புரம் ,தேராவில் கிராமசேவகர் பிரிவில் உள்ள 33 குடும்பங்களுக்கு முதல் கட்டமாக
யாழ். தெல்லிப்பழை கொல்லங்கலட்டியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Stuttgart ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அமரர் ஆறுமுகம் குணலிங்கம் அவர்களின் 2ம் ஆண்டு திதி நினைவாக அவரது பிள்ளைகள். இந்த உதவியினை வழங்கி உள்ளார்கள் அவர்களுக்கு நன்றி கூறுவதுடன் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றோம். அமரர் ஆறுமுகம் குணலிங்கம் அவர்களின் பிள்ளைகளில் மூன்று பேர் எமது உறுப்பினர்கள் ஆவார் திரு கு.மணிமாறன் ( செயலாளர்) திரு கு.நிசாந்தன் திருமதி சுதாமினி இவர்களுடன் மற்றைய சகோதரர்களுக்கும் நன்றி. அத்துடன் இந்த ஏற்பாட்டினைச் செய்து தந்த புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் மற்றும் எமது செயற்பாட்டாளர் திரு சஜிவன் அவர்களுக்கும் நன்றி. “உதவும் இதயங்கள் நிறுவனம் யெர்மெனி.