புதுமண தம்பதியினரின் தலையை முட்ட வைத்து ரசித்த உறவினர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா, பாலக்காட்டை சேர்ந்தவர்கள் சச்சின் – சஜ்லா. இவர்களுக்கு அண்மையில் திருமணம் நடைபெற்றுள்ளது.
திருமணம் முடிந்து , மணமகன் வீட்டிற்கு மணமக்கள் சென்றபோது, மணமகனின் உறவினர் மணமக்களின் தலையை வேகமாக முட்ட வைத்துள்ளார்.
இதனால் வழிதாங்க முடியாத மணப்பெண் அழுதுக்கொண்டே மணமகன் வீட்டிற்குள் சென்றுள்ளார்.
இதுகுறித்த வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலானதை அடுத்து மகளிர் ஆணையம் விசாரணைக்கு உத்தரவிட்டது.
பெண்மையை அவமதித்ததுடன், அனாவசியமாக தொல்லை கொடுத்ததாகவும் மணமகனின் உறவினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.