அறிமுகப்படுத்தபடவுள்ள வர்த்தக பொருட்கள் மற்றும் சேவை வரிகள் முதலானவற்றில் எந்தவொரு அத்தியாவசிய பொருட்களும் உள்ளடக்கப்படவில்லை என்று நிதி நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.
மதுபானம் அல்லது அது போன்ற பொருட்களுக்கே இந்த வரியை வித்ப்பதற்கு தாம் எதிர்பார்ப்பதாகவும் நிதி அமைச்சர் கூறினார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தினால் நேற்று (13) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த,வரவு செலவு திட்டம் 2022 – நிதிஅமைச்சருடனான தொடர் கலந்துறையாடலின் போதே நிதி அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
குறித்த வரியை எந்த சதவீதத்தில் அறவிடுவது மற்றும் எத்தகைய பொருட்களுக்கு வரியைக் குறைப்பது குறித்து அறியத்தரவிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
வரி கொள்கையில் பாரிய மாற்றம் செய்யாது நிலையாக வைத்திருக்க வேண்டும் என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடாகும்.குறைந்தது 3 வருடத்திற்கேனும் ஒரே வரி கொள்கை நடைமுறையில்இருக்க வேண்டும். அடிக்கடி வரி அறவீட்டில் மாற்றம் ஏற்படுத்துவதன் காரணமாகச் சகலரும் பாதிக்கப்படுவதாக நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ் தெரிவித்தார்.
அரச பொது சேவை நம் நாட்டிற்கு ஒரு சுமை என்பதை நாம் நேர்மையாக ஒப்புக் கொள்ள வேண்டும். பொது சேவைக்காக இன்னும் பொது பணத்தை செலவழிக்க, அரச உத்தியோகத்தர்களின் எண்ணிக்கையை விரிவாக்கவும் எமக்கு முடியாது. வருடாந்தம் ஓய்வு பெறும் நபர்களுக்கு அமைய இளைஞர்களை உள்ளீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்.