புதிய சின்னக்குளம் வவுனியா கிராமத்தில் மகளிர் தினம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது
புதிய சின்னக்குளம், வவுனியா கிராமத்தில் “உதவும் இதயங்கள்” கிராமிய முற்போக்கு ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மகளிர் தினம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்வு 28.03.2026 ஆம் நாள் சனிக்கிழமை பிற்பகல் 1.00 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்ப நிகழ்வாக அகவணக்கம் இடம்பெற்றதுடன், அதனைத் தொடர்ந்து மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் இனிதே தொடங்கின.
நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக மகளிர் சிறப்பு உரைகள், கவிதை வாசிப்புகள், பாடல்கள், விளையாட்டு நிகழ்ச்சிகள் மற்றும் பல்வேறு போட்டிகள் சிறப்பாக நடைபெற்றன. இதில் கலந்து கொண்ட பெண்கள் ஆர்வமுடன் பங்கேற்று நிகழ்வை சிறப்பித்தனர்.
இந்நிகழ்வு சமூக ஒற்றுமையையும் பெண்களின் திறமைகளையும் வெளிப்படுத்தும் வகையில் மிகச் சிறப்பாக அமைந்தது என குறிப்பிடப்படுகிறது.
இந்த நிகழ்வை சிறப்பாக ஏற்பாடு செய்து நடத்தி வெற்றியடையச் செய்த அனைவருக்கும் “உதவும் இதயங்கள்” நிறுவனம் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துள்ளது.
– உதவும் இதயங்கள் நிறுவனம், ஜெர்மனி

















