தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஊடகப் பேச்சாளரும், பிள்ளையானின் பாட்னருமான ஆர்சாத் மௌலானாவுக்கும் பிள்ளையானுக்கும் இடையே ஏற்பட்ட முறுகல் நிலை காரணமாக ஆர்சாத் மௌலானாவை படுகொலை செய்ய தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் முயற்சி செய்ததாக கூறி ஆர்சாத் மௌலானா ஐரோப்பிய நாடு ஒன்றில் அரசியல் தஞ்சம் கோரியுள்ளார்.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தன்னை கொலை செய்ய எடுக்கப்பட்ட முயற்சியில் இருந்து தப்பித்து ஐரோப்பிய நாடு ஒன்றில் அரசியல் தஞ்சம் கோரியுள்ள ஆர்சாத் மௌலானா தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினர் மேற்கொண்ட கொலை,கொள்ளை, கடத்தல் சம்பவங்கள் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகள் குறித்து ஐக்கிய நாடுகள் சபையிடம் ஒப்புதல் வாக்குமூலம் வழங்கி உள்ளதாக கூறப்படுகிறது.
ஆர்சாத் மௌலானா தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கு எதிரான சாட்சியாக மாறியதால் அதன் தலைவர் பிள்ளையான் கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தில் கடந்த 9 ம் திகதி மலேசியா தப்பிச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.