இயக்குனர் முருகதாஸ் தற்போது தமிழ் சினிமாவில் அதிகம் பாப்புலர் ஆன இயக்குனர்களில் ஒருவர். பல டாப் ஹீரோக்களை வைத்து படம் இயக்க பல பெரிய ஹிட் படங்களை கொடுத்து இருக்கிறார்.
இந்நிலையில் முருகதாஸின் அக்கா கணவர் ‘நாமக்கல் எம்ஜிஆர்’ என்பவர் முகத்தில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து நடிகர் எம்ஜிஆர் போலவே மாறி இருக்கிறார்.
தற்போது ‘உழைக்கும் கைகள்’ என்ற படத்தில் அவர் நடித்து இருக்கிறார். அந்த படம் தற்போது தியேட்டர்களில் ரிலீஸ் ஆகி இருக்கிறது.
இயக்குனர் முருகதாஸ் அவருக்கு பலமுறை அட்வைஸ் கூறி இருக்கிறாராம். ‘எதற்கு மச்சான் இப்படி ரோட்ல ஆடிட்டு இருக்காரு. நகை கடை வெச்சி உட்காரலாம்ல’ என பலமுறை அக்காவிடம் கூறி இருக்கிறாராம்.
அவர் எம்ஜிஆர் மீது இருக்கும் வெறியில் இப்படி பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்டு மாறி இருக்கிறார். அவருக்கு சொந்தமாக ஒரு ஐடி நிறுவனம் இயங்கி வருகிறதாம். மகன், மகள் என இருவருமே சாப்ட்வேர் எஞ்சினியர் தானாம்.
எம்ஜிஆர் போல நடித்து வரும் பணத்தை அவர் எப்போதும் ஏழைகளுக்கு கொடுத்துவிடுவாராம். அதை அவரே ஒரு இதழுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்து இருக்கிறார்.