பிலிப்பைன்ஸ் அரசாங்கத்தினால் விதிக்கப்பட்டிருந்த பயணத் தடை இலங்கை உள்ளிட்ட ஏழு நாடுகளுக்கு, தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும் 30 ஆம் திகதி வரை இந்தத் தடை நீடிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி , இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ், நேபாள், ஓமான் மற்றும் ஐக்கிய அரபு இராஜ்ஜியம் ஆகிய நாடுகளுக்கு பிலிப்பைன்ஸ் தொடர்ந்தும் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தீர்மானம் கொரோனா தொற்று அச்சநிலைமையைக் கருத்திற் கொண்டு, பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதேவேளை பிலிப்பைன்ஸ் , இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு, கடந்த மே 7 ஆம் திகதி முதல் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.