பிரித்தானியாவில் பாள்ளி மாணவியின் ஆடைக்கு கீழ் தன்னுடைய மொபைல் போனை வைத்து புகைப்படம் எடுத்த நபர் பொலிசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான்.கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 1-ஆம் திகதி Leon Chan என்று அறியப்படும் 26 வயது மதிக்கத்தக்க நபர், பிற்பகல் உள்ளூர் நேரப்படி 3 மணியளவில், Ewell-ல் இருந்து Ashtead-வுக்கு செல்லும் இரயிலில் பயணித்துக் கொண்டிருந்தான்.
அப்போது பள்ளி சிறுமி ஒருவர் அந்த இரயிலில் இருந்துள்ளார். இதை கவனித்த Leon Chan உடனடியாக எழுந்து, இரயில் கதவின் அருகே நிற்பது போல் சென்றான்.அப்போது தன்னுடைய மொபைல் போனில் கமெராவை ரகசியமாக ஆன் செய்துவிட்டு, அந்த சிறுமியின் ஆடைக்கு கீழ் ரகசியமாக புகைப்படம் எடுத்தான். இது எல்லாம் இரயிலில் இருக்கும் சிசிடிவி கமெராவில் பதிவானது.
குறிப்பாக தொலைப்பேசியில் வீடியோவோ அல்லது புகைப்படமோ எடுக்கும் போது, அதில் இருக்கும் லைட் மின்னும், அதே போன்று தான் இவனுடைய போனில் மின்னியுள்ளது.இப்படி தொடர்ந்து அவர் பல்வேறு விதங்களில் சிறுமி அருகில் சென்று புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தன். அதன் பின் ஒன்றும் தெரியாதது போல் இறங்கிவிட்டான்.
இவை அனைத்தையும் சிசிடிவி கமெராவில் கண்ட பொலிசார், அவரை தேடிப் பிடித்து கைது செய்தனர். அதன் பின் அவரை ஷெபீல்ட் கிரவுன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த, வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு ஒரு வருடம் எட்டு மாதங்கள் சிறை தண்டனை விதித்ததுடன், பாலியல் குற்றவாளிகளின் பதிவேட்டில் 10 ஆண்டுகள் கையெழுத்திடவும் உத்தரவிட்டது.
மேலும், கைது செய்யப்பட்ட அந்த நபரின் தொலைப் பேசியை பொலிசார் சோதனை செய்த போது, அதில் 1700-க்கும் மேற்பட்ட பெண்களின் புகைப்படங்கள் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.
அனுமதியின்றி பெண்ணின் ஆடைகளின் கீழ் ஒரு படத்தைப் பதிவுசெய்து, பாலியல் பாதிப்பு தடுப்பு ஆணையை (SHPO) மீறியதால் அவர் ஒரு குற்றவாளி எனவும், பிரித்தானிய போக்குவரத்து காவல்துறையின் துப்பறியும் கான்ஸ்டபிள் அமினா கொய்ரேட்டி தனது தண்டனைக்கு பின்னர் அவன் எந்த ஒரு வருத்தத்தையும் காட்டவில்லை என்று கூறினார்.