பிரான்ஸில் வசிக்கும் ஈழ தமிழர் ஒருவர் கேரள ஜோதிட நிறுவனம் ஒன்றில் பல நூறு யூரோக்களை கொடுத்து ஏமாந்துள்ளார்.குறித்த நபர் மூட்டுவாதம் காரணமாக நான்கு வருடங்கள் அவதிப்பட்ட வந்துள்ளார்.இந்தியாவில் கேரளா சென்று சித்த வைத்தியம் பார்க்க முடிவு செய்துள்ளார்.
எனினும் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலைகள் காரணமாக அவரால் இந்தியா போக முடியவில்லை.இந்நிலையில் பிரான்ஸ் செய்தி ஊடகம் ஒன்றில் பார்த்த பெரிய விளம்பரத்தை நம்பி பாரிஸில் உள்ள கேரள ஜோதிடம் சென்றுள்ளார்.
குறித்த நபர் பாரிஸுக்கு வெளியே சில நூறு கிலோமீட்டர் தொலைவில் வசித்து வந்த நிலையில் மேற்குறித்த ஜோதிடரை தொலைபேசியில் அழைத்து தனது மூட்டுவாத பிரச்சினைகளை சொல்லி மருந்து அனுப்புமாறு கேட்டுள்ளார்.அதற்கு ஜோதிடர் நேரில் வந்து பார்த்த பிறகே வைத்தியம் செய்யலாம் என கூறி அழைத்துள்ளார்.
அதற்கும் பணத்தை செலவழித்து நேரில் சென்று மருந்து எடுத்து சென்றுள்ளார் குறித்த நபர்.இரண்டு கிழமையில் சரியாகும் ஆனாலும் மருந்தை ஒரு மாதத்துக்கு உரியதை வாங்கி சாப்பிடுமாறு கூறி 300€ கறந்துள்ளார்.திரும்பி சென்றவர் மாதம் காலம் ஆகியும் ஏதும் மாற்றமில்லாமல் தவித்துள்ளார்.
மீண்டும் அழைத்த போது இன்னும் ஒரு மாதம்,என்று இழுக்க..அதுவும் சென்று வாங்கி வந்தும் தீரவில்லை..இந்நிலையில் உஷாரான நபர் ஜோதிடரை அழைத்து எதுவுமே நடக்கவில்லை பணத்தை திருப்பி தருமாறு கேட்டுள்ளார்.அதற்கு ஜோதிடர் முதலில் மறுத்துள்ளார்.பின்னர் குறைந்த தொகை ஒன்றை திரும்பி தருகிறேன் என்று கொடுத்துள்ளார்.
கிடைத்த பணமே போதும் என்று இருக்கும் குறித்த நபர் இது குறித்த தமிழர்களுக்கு விழிப்புணர்வு செய்யும் நோக்கில் எமது தளத்தை தொடர்பு கொண்டு எழுதியிருந்தார். தமிழர்கள் எப்படியெல்லாம் ஏமாற்றப்படைகிறார்கள் என்று கொதிப்படைந்துள்ளார்.
இது குறித்து சட்டநடவடிக்கைகள் எடுக்க தயாராகும் நபர்,மேலும் பாதிக்கப்பட்ட நபர்கள் இருந்தால் தன்னை தொடர்பு கொள்ளுமாறு கேட்டு கொண்டுள்ளார்.பிரான்ஸ் ஊடகம் என்ற வகையில் அவரின் கோரிக்கைக்கு செவி சாய்த்து மக்களுக்கு இதை தெரியப்படுத்துகின்றோம்.
மேலும் ஊடகங்களில் வரும் விளம்பரங்களுக்கும் ஊடகங்களுக்கும் நேரிடையான சம்பந்தமில்லை…ஆகவே விளம்பரங்கள் தொடர்பில் தனிப்பட்ட மக்கள்தான் தீர ஆராய்ந்து முடிவு எடுக்க வேண்டும்.ஏனெனில் இது கூகிள் காலம்..யாரின் இணையதளத்திலும் யாரும் கூகிள் ஊடாக விளம்பரங்களை இடலாம்..ஆகவே பொறுப்புக்களை தனிநபர்களை பாதிக்கப்படும் ஏற்றுகொள்ள வேண்டும்.
மேலும் சித்த வைத்தியம் தொடர்பில் சரியான தெளிவு உள்ள தெரிந்த பாரம்பரிய மருத்துவர்களிடம் செல்வது சிறந்து,கூட்டம் கூடுது என்று அங்கும் இங்கும் திரிய வேண்டாம்,விளம்பர கவர்ச்சிகளை கண்டு ஏமாறாதீர்கள்.குறைந்து 45-50 வயது ஆவது ஒரு சரியான பட்டறிவு பெற்ற சித்த வைத்தியருக்கும் இருக்க வேண்டும்… வெளி தோற்றங்கள் தேன் ஒழுகும் பேச்சுக்களை நம்பியோ அல்லது உங்களின் அவசரங்களினால் வலைகளில் வீழ்ந்து ஏமாறாதீர்கள்.