பிரான்ஸில் நடைபெற்ற சர்வதேச பொலிஸ் சங்கத்தின் (IPA) உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட இலங்கை பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் மாயமானதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
மேல்மாகாண பொலிஸ் போக்குவரத்துப் பிரிவில் கடமையாற்றும் குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் கடந்த மே மாதம் நாடு திரும்பத் திட்டமிடப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், உச்சிமாநாட்டில் கலந்து கொண்ட பிறகு அவர் திரும்பாமை குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் பிரான்சில் தங்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதன்போது மேல்மாகாண பொலிஸ் போக்குவரத்துப் பிரிவினால் சனிக்கிழமை (17) குறித்த உத்தியோகத்தர் பதவியிலிருந்து விலகியதாகக் கருதப்படும் சுற்றறிக்கையொன்றும் வெளியிடப்பட்டது.
இதேவேளை கடந்த வாரம், ஐக்கிய இராச்சியத்தில் (UK) இடம்பெற்ற மாநாடு ஒன்றில் கலந்து கொண்ட இலங்கை பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஐந்து பேர் நாடு திரும்பாமை குறிப்பிடத்தக்கது.