ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் அறிவித்துள்ள நான்கு கட்ட உள்ளிருப்பு தளர்வுகளில், முதலாவது கட்ட தளர்வு ஒன்று மே 3 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பிக்கின்றது.
#இன்று_திங்கட்கிழமை நடுநிலை பாடசாலை மாணவர்களுக்கும் உயர்கல்வி பாடசாலை மாணவர்களுக்கும் பாடசாலைகள் ஆரம்பிக்கின்றன. பாடசாலை வகுப்பறை மாணவர்களின் எண்ணிக்கையில் பாதி அளவுடைய மாணவர்களே அனுமதிக்கப்பட உள்ளனர்.
அதேவேளை, பகல் நேரத்திற்கான 10 கிலோ மீற்றர் பயணக்கட்டுப்பாடும் தளர்த்தப்பட்டுள்ளது. நீங்கள் வசிக்கும் வீட்டில் இருந்து அதிகபட்சமாக 10 கிலோமீற்றர்கள் மாத்திரமே பயணிக்கக்கூடிய நிலையில் இருந்து தற்போது, அவை தளர்த்தப்பட்டுள்ளது.
அதேவேளை, இரவு 7 மணியில் இருந்து காலை 6 மணிவரையான உள்ளிருப்பு தொடர்ந்தும் நடமுறையில் இருக்கும்.