பிரான்சில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட இளைஞன் ஒருவர் உயிரிழந்த நிலையில், இது குறித்து விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பிரான்சின் Nantes நகரில் வசிக்கும் 26 வயது மதிக்கத்தக்க இளைஞன் ஒருவர் கடந்த மார்ச் மாதம் 18-ஆம் திகதி மர்மான முறையில் திடீரென்று உயிரிழந்தார்.
இவர் உயிரிழப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு தான் கொரோனா தடுப்பூசியான AstraZeneca தடுப்பூசியை போட்டுள்ளார். அதன் பின்னரே இவர் உயிரிழந்துள்ளதால், இது குறித்து அந்த இளைஞனின் குடும்பத்தார் புகார் தெரிவித்து வழக்கு தொடுத்துள்ளனர்.
இதையடுத்து இந்த சம்பவம் பரிஸ் வழக்கறிஞர் அலுவலகம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. .