நாட்டில் திடீரென முளைத்த சோதனை சாவடி தொடர்பில் , ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார, நாடாளுமன்றத்தின் மீது எவரும் குண்டுத்தாக்குதல்களை மேற்கொள்ள உள்ளார்களா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
நாடாளுமன்றத்தின் இன்றைய அமர்வில் கலந்துகொண்டு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு எதுவும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதா? பிங்கிரிகமயிலிருந்து நான் பாராளுமன்றத்துக்கு வரும்வழியில் 21 பொலிஸ் சோதனை சாவடிகளை கடந்து வர வேண்டியிருந்தது.
இதில் 10 இடங்களில் எனது வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததாகவும் தெரிவித்தார். பிங்கிரியவிலிருந்து பாராளுமன்றத்துக்கு வரும்வரையில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர ஏன் இத்தனை சோதனை சாவடிகளை அமைத்துள்ளார்? என கூறிய அவர், பிரபாகரன் மீண்டும் வந்து குண்டு தாக்குதல் நடத்த உள்ளாரா எனவும் அவர் இதன்போது கேள்வி எழுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.