பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறிய ஜனனி வாங்கிய சம்பளம் தொடர்பிலான தகவல் வெளியாகி நெட்டிசன்களை வாய்பிளக்க வைத்துள்ளது.
ஜனனினிக்கு பிக்பாஸ் வீட்டில் ஒரு நாளைக்கு 25 ஆயிரம் ரூபாய் சம்பளம் பேசப்பட்டு இருந்ததாகவும், அவர் பிக் பாஸ் வீட்டில் 70 நாட்கள் இருந்ததால், பல லட்சத்திற்கு மேல் சம்பளமாக வாங்கி உள்ள்ளதாகவும் கூறப்படுகின்றது.
விஜய் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழகத்தை கடத்தும் மக்கள் பெரிதும் விரும்பி பார்க்கும் நிகழ்ச்சியாக அமைந்துள்ளது. ஏனெனில் இந்தியர்கள் மட்டுமல்லாது பிற நாட்டிவாழும் தமிழர்களையும் உள்ளீர்ப்பதுதான் அத்ற்கு காரணம்,
அதிலும் இலங்கை தமிழர்களை நிகழ்ச்சியில் உள்ளீர்ப்பதே புலம்பெயர் தமிழர்களும் பிக்பாஸ் நிகழ்ச்சியை ஆவலுடன் பார்ப்பதற்கு ஒரு காரணமாக உள்ளது.
லாஸ்லியா , தர்சன்
அந்தவகையில், லாஸ்லியா , தர்சனை தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் நுழைந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஜனனி ரசிகர்கள் மத்தியில் அதிகம் விரும்பப்பட்டவராவார்.
இந்நிலையில் பிக் பாஸ் சீசன் ஆறு நிகழ்ச்சியில் தற்போது சென்றுகொண்டுள்ள நிலையில், ஜனனி, வீட்டைவீடு வெளியேறியுள்ளார். ஜனனி ஆர்மி ஜனனி உள்ளே வந்ததும் ரசிகர்கள் ஆர்மிகளை உருவாக்கி தெறிக்கவிட்டனர்.
அவரின் டிக்டாக் வீடியோக்களை இணையத்தில் வைரலாக்கினார்கள். இந் நிலையில், யாரும் எதிர்பார்க்காத விதமாக செம ட்விஸ்டுடன் ஜனனி வீட்டை விட்டு வெறியேறியது அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
அதேவேளை பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறும் முன்னர் ஜனனி கமல்ஹாசனின் காலில் விழுது வணங்கி சென்றமை ஜனனி ரசிகர்களை நெர்கிழவைத்துள்ளது.