தமிழில் முக்கிய தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் டிவியில் பல ரியாலிட்ரி ஷோக்களில் பிரமாண்டமாக ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ். கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்த நிகழ்ச்சி கடந்த ஐந்து சீசன்களாக மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது.
அதில் கடந்த ஐந்தாவது சீசன் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இதில் மக்களிடமிருந்து அதிக வாக்குகளை பெற்று ராஜு டைட்டில் வின்னர் ஆகியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து பிக் பாஸ் அல்டிமேட் என்னும் நிகழ்ச்சி பிரபல ஓடிடி தளத்தில் மட்டுமே ஒளிபரப்பானது. ஆனால், பெரிதளவில் ரீச் கிடைக்கவில்லை.
இந்நிலையில், ஜூலை மாதம் நடுவே அல்லது ஆகஸ்ட் மாதம் பிக் பாஸ் சீசன் 6 துவங்கும் என தகவல் வெளியாகியுள்ளது