தமிழகத்தில் பிரபலமான தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் டிவியில் வெற்றிகரமான ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிதான் பிக்பாஸ்.
இந்த நிகழ்ச்சியின் 6 வது சீசன் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கோலகலமாக தொடங்கிய நிலையில் நேற்றையதினம் ஃபினாலே நடந்து முடிந்துள்ளது.
இந்நிலையில் ஃபினாலேவில் விக்ரமன் & அசிம் இருவரில் அசிமின் வெற்றியை அறிவிப்பதற்கு முன்பாக, கையை மாற்றி மாற்றி ஆட்டி விளையாட்டு காட்டிய கமல் இறுதியாக அசிம் வெற்றி பெறுவதாக அறிவித்தார்.
இதனையடுத்து கிராண்ட் ஃபினாலேவில் பேசிய கமல்ஹாசன், “முந்தைய சீசன் போல், இந்த பிக்பாஸ் சீசனில் போட்டியாளர்கள் வெளியே சென்று விட்டு திரும்பவும் வீட்டுக்குள் போகும்போது நேர்மறையான கருத்துக்களை கூறுவார்கள் என எதிர்பார்த்தால், இந்த சீசனில் எலிமினேட் ஆகி போட்டியாளர்கள் வெளியே போன போட்டியாளர்கள் மீண்டும் வீட்டுக்குள் செல்லும்போது சண்டைதான் உருவானது” என்று தன் பார்வையை முன்வைத்து விட்டு இது சரியா என்று மகேஸ்வரியை கேட்டார்.
அதற்கு மகேஸ்வரி சிரித்தபடி எழுந்து, “சார் சண்டை போட வேண்டும் என்று பிக் பாஸ் வீட்டுக்குள் செல்லவில்லை, அந்த வீட்டுக்குள் சென்றாலே சண்டை வந்துவிடுகிறது” என்று கலகலப்பாக தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, “என்ன மணிகண்டன்? நீங்கள் சொல்லுங்கள்” என்று கமல்ஹாசன் மணிகண்டனை கேட்க, அவரும் சிரித்துக் கொண்டே பதில் சொல்ல வர, அதற்கு கமல், “இல்லை.. அதற்குள் நாம் ஆழமாக போக வேண்டாம்.. நான் என் வேலையை செய்தேன்.. நாராயணா.. நாராயணா..” என்று விளையாட்டாக கூறினார்.