பிக் பாஸ் நிகழ்ச்சி 10 வாரங்களை வெற்றிகரமாக கடந்துள்ள நிலையில் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப் போகும் போட்டியாளர் தொடர்பில் சற்றுமுன் தகவல் கசிந்துள்ளது.
அதன்படி இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து எதிர்பார்த்ததை போலவே ஏடிகே வெளியேறி உள்ளார் என தகவல்கள் கசிந்துள்ளன
கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் 6வது சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பெரிய செலிபிரிட்டிக்கள் இல்லாதது ரசிகர்களை அதிகம் கவரவில்லை என்கிற குற்றச்சாட்டுக்கள் ரசிகர்களிடமிருந்து எழுந்துள்ளது.
ஆரம்பத்தில் ஜிபி முத்து வருகையால் ரசிகர்களின் கவனத்தை பெற்ற பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி அவர் அதிரடியாக வெளியேறிய நிலையில், அதன் பின்னர் சில ஸ்டன்ட்டுகள், சண்டைகள் போடப்பட்டு நிகழ்ச்சி பக்கம் கவனத்தை திருப்பினர்.
சண்டைகள் சச்சரவுகள்
அதன் பிறகு சண்டைகள் மற்றும் சச்சரவுகள் இல்லாமல் சைலன்ட்டாக டாஸ்க் மட்டுமே போட்டியாளர்கள் விளையாடி வருவதால் ரொம்பவே போரிங்கான சீசனாக இந்த பிக் பாஸ் மாறிவிட்டதாக பலரும் கமெண்ட் அடித்து வருகின்றனர்.
இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற ஹவுஸ்மேட்கள் அசீம், விக்ரமன், ஏடிகே, ரச்சிதா, ஜனனி மற்றும் மணிகண்டன் உள்ளிட்ட போட்டியாளர்களை நாமினேட் செய்தனர்.
இதில், மிகவும் குறைவான ஓட்டுக்களுடன் இந்த வாரம் வெளியேறப் போவது யார் என்கிற தகவல் தற்போது கசிந்து விட்டது. அதன்படி இந்த வாரம் வெளியேறப் போகும் போட்டியாளரும் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்த போட்டியாளர் தான் .
இந்த வாரம் டேஞ்சர் ஜோனில் ஏடிகே மற்றும் மணிகண்டன் இருவரும் தான் டேஞ்சர் ஜோனில் இருந்தனர்.
ஐஸ்வர்யா ராஜேஷின் அண்ணன் மணிகண்டன் ஏன் இன்னமும் பிக் பாஸ் வீட்டில் இருக்கிறார் என்பதே புரியாத புதிராக ரசிகர்களுக்கு இருக்கும் நிலையில், இந்த வாரமும் அவர் எஸ்கேப் ஆகி விட்டார் என்றே தகவல்கள் கசிந்துள்ளன.
இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து எதிர்பார்த்ததை போலவே ஏடிகே வெளியேறி உள்ளார் என தகவல்கள் கசிந்துள்ளன.
அதேவேளை அடுத்த வாரம் மணிகண்டன், மைனா நந்தினி, ரச்சிதா, அமுதவாணன் உள்ளிட்டோரில் யார் வெளியேறுவார் என எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் எகிறி உள்ளன.