தமிழில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்ட ஜேர்மன் வாழ் இலங்கைப்பெண்ணான மதுமிதா அவர் வாழ்க்கையில் கடந்துவந்த சோகமான பாதை பற்றி இன்று இடம்பெற்ற டாஸ்க்கில் உருக்கமாக பேசியுள்ளார்.
தமிழகத்தில் பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் நிகழ்ச்சிதான் பிக்பாஸ். பிக்பாஸ் 4 சீசன்களும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்ப்பை பெற்றது.
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (03) பிக்பாஸ் சீசன் 5 கோலகலமாக தொடங்கியது. இந்நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிவருகிறார்.
மேலும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் ஜெர்மன், மலேசியாவில் வாழும் தமிழ்பெண்கள் மற்றும் தமிழகத்தில் பிரபல்யமானவர்கள் உட்பட 18 போட்டியாளர்கள் பங்கேற்று உள்ளனர்.
பிக்பாஸ் சீசன் 5-யில் ஜெர்மன் வாழ் இலங்கை தமிழ்ப்பெண்ணான மதுமிதா என்பவர் கலந்துகொண்டுள்ளார். பிக்பாஸ் வீட்டின் 4 -வது நாள் இடம்பெற்ற போட்டியாளர்கள் கடந்து வந்த துயரம் என்ற டாஸ்க்கில் மதுமிதா கடந்து வந்த துயரத்தை சக போட்டியாளர்களுடன் பகிர்ந்துள்ளார்.
இதன்போது அவர் கூறியது,
நான் ஜேர்மனியில் ஒரு ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தேன், அது ஒரு பெரிய நகரம் அதில் குடும்பத்தை விட்டு தனியாக வசித்து வந்தேன், அதனால் ரொம்ப மன உளைச்சலுக்கு ஆளானதால் தற்கொலை செய்துக்கொள்ள முயற்சித்தேன். ஓவ்வொரு நாளும் இரவு உறங்க செல்வதற்கு முன் இதயத்துடிப்பு அதிகரிக்கும் அப்போது ஜன்னலை துறந்து அதிலிருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயற்சிப்பேன், ஆனால் தாய், தந்தையின் முகம் தான் நினைவுக்கு வரும் அதனால் நான் தற்கொலை செய்துகொள்ளும் முடிவை நிறுத்திவிட்டேன் என அவருடைய துயரங்களை கூறியுனார். மேலும் அம்மா , அப்பா தான் எனக்கு எல்லாம், அவர்கள் எனக்காக எதையும் செய்வார்கள் எனவும் கூறியுள்ளார்.