பால்மாவின் விலை உயர்வைக் கருத்தில் கொண்டு திரவப் பாலுக்கு திரும்புமாறு பொதுமக்களிடம் மில்கோ நிறுவனத்தின் தலைவர் லசந்த விக்ரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.
தனது நிறுவனத்திற்கு உள்நாட்டு பால் மா பெக்கெட் ஒன்றில் 75 ரூபாய் நட்டம் ஏற்பட்டதால், பால் மாவின் விலையை உயர்த்தியதாக அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, நவம்பர் மாதம் முதல் பால் விவசாயிகளுக்கு வழங்கப்படும் விலையை லீட்டருக்கு 7 ரூபாவால் அதிகரிக்க மில்கோ தீர்மானித்துள்ளதாக லசந்த விக்ரமசிங்க மேலும் தெரிவித்தார்.