நீரிழிவு நோயாளிகளுக்கு கால் புண்கள், பாதங்களில் உணர்ச்சியின்மை, கால் வறட்சி போன்ற பிரச்சனைகளை ஏற்படக்கூடும்.
நீரிழிவு நோயாளிகள் கால்களில் வரக்கூடிய பாதிப்புநீரிழிவு நோயாளிகளுக்கு நீரிழிவு பாதிப்பு எத்தனை வருடங்கள் உள்ளதோ அதை பொறுத்து உடலிலும் பக்கவிளைவுகளை உண்டு செய்யும்.
நீரிழிவு இரத்தக்குழாய்களை பாதிப்பது போன்று peripheral neuro என்னும் புற நரம்பு கோளாறையும் உண்டு செய்யும். ஒன்று vascular peripheral மற்றொன்று neuro peripheral. இந்த நியூரோபதி நரம்புகளை பாதிப்பதால் உணர்ச்சிகளை பாதிக்கும்.
கால்களில் இரத்த ஓட்டம் குறைந்துவிடும். இதற்கு காரணம் இரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்படுவது. இரத்த குழாய் அடைப்பு இதயத்தில் என்னும் போது உடனே பரிசோதனையும் சிகிச்சையும் செய்துவிடுகிறார்கள்.
ஆனால் உடலில் இருக்கும் peripheral arthritis குறித்து யாரும் கவலைப்படுவதில்லை. அதனால் தான் நீரிழிவு நோயாளிகளுக்கு கால் புண் பாதிப்பு அதிகரிக்கிறது.
சர்க்கரை நோய் வந்த உடன் நீரிழிவு சிகிச்சை நிபுணரை அணுகி சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவது எப்படி, என்னென்ன மாத்திரைகள் எடுக்க வேண்டும் என்று கேட்டுகொள்கிறார்கள்.
உடலில் இரத்த சர்க்கரை அளவு குறைக்கும் சிகிச்சைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். மேலும் உடல் பரிசோதனை என்று இதயம், சிறுநீரகம், கண்கள் போன்ற பரிசோதனைக்கும் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.
ஆனால் கால்களுக்கான பரிசோதனைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. நீரிழிவு 4 வருடங்களுக்கு பிறகு கால்களில் பாதிப்பை தரும் போது அதாவது உணர்ச்சியின்மையை உணரும் போது மருத்துவரை அணுகிறார்கள்.
நீரிழிவால் கால்களில் உணர்ச்சியின்மை இருக்கும் போது கால் குத்துவது போன்ற உணர்வு இருக்கும். அப்போது பாதங்களில் ஏதேனும் புண் வந்தால் கூட உணர்ச்சியின்மையால் அறிய முடியாது.
எப்போதேனும் கால்களை கவனிக்கும் போது அல்லது தூங்கும் போது வீட்டில் இருப்பவர்கள் இதை பார்த்த பிறகு தான் மருத்துவரிடம் சிகிச்சைக்கு செல்வார்கள். இதை கவனிப்பதற்குள் தொற்று மோசமான நிலைக்கு பரவி விடலாம்.
நீரிழிவு புண் நீரிழிவு நோயால் அவதிப்படுபவர்களுக்கு கால்களில் வரக்கூடிய பாதிப்பு தான் நீரிழிவு புண் என்று சொல்லப்படுகிறது.
சர்க்கரை நோய் சிகிச்சைக்கு 90% மருந்துகள், இன்சுலின் என்று மெடிக்கல் மேனேஜ்மெண்ட் சொன்னாலும் 10% சிகிச்சை என்பது அறுவை சிகிச்சை முறையில் தான் சரி செய்ய முடியும்.
அதில் இந்த நீரிழிவு கால் புண் ஒன்று. நடக்கும் போது இதயத்தில் இருந்து ரத்த ஓட்டம் வேகமாக இருக்கும்.
கெட்ட ரத்த ஓட்டம் மேலே வர கடினமாக இருக்கும். அதனால் தான் காலில் புண் வந்தாலும் வேகமாக ஆறாது. சில சமயங்களில் இவர்கள் புண்ணுக்கு சிகிச்சை அளிக்க அலட்சியம் செய்யும் போது தொற்று இல்லாத புண்களும் கூட தொற்றுக்கு ஆளாகலாம்.
நீரிழிவு நோயாளிகளில் 10% மக்களுக்கு கால் புண் வருகிறது. இந்த 10% மக்களில் 50% பேர் கால்களில் பாதிப்பை பெற்றுவிடுகிறார்கள். இதை தடுக்க என்ன செய்வது என்பதை தெரிந்துகொள்வோம்.
நீரிழிவு நோயாளிகள் கால்களை பராமரிக்க வேண்டும் நீரிழிவு நோயாளிகள் உடல் பரிசோதனையின் போது இதயம், சிறுநீரகம், நுரையீரல், கண்கள் உடன் கால் பரிசோதனையும் செய்து கொள்ள வேண்டும்.
தற்போது இது குறித்த விழிப்புணர்வு அதிகரித்துவருகிறது என்றாலும் முன்கூட்டியே தடுப்பது தான் இந்த பாதிப்பை குறைக்க உதவும்.
அதனால் காலணி அணியாமல் எங்கும் செல்ல கூடாது. வீட்டுக்குள்ளும் காலணி அணிவது அவசியம். ஏனெனில் கால் புண்களை தடுக்க இவை தான் முதன்மையான தடுப்பு முறை ஆகும்.
நீரிழிவு நோயாளிகளுக்கு கால்களில் வறட்சி இருப்பது வழக்கம். முந்தைய காலங்களில் வாரம் ஒருமுறை எண்ணெய் குளியல் செய்து வந்ததால் சரும வறட்சி தடுக்கப்பட்டது.
சரும வறட்சியை தடுக்க தினமும் ஒரு வேளை சுத்தமான தேங்காயெண்ணெய் கொண்டு மசாஜ் செய்து வருவது அவசியம்.