கொழும்பிற்குள் பிரவேசிக்கும் அனைத்து வெளி பிரதேச வீதிகளையும் உள்ளடக்கும் வகையில் பாடசாலை மாணவர்களுக்கான 20 ‘சிசு செரிய’ பஸ் சேவைகளை இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இத்தகவலை போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
20 பஸ் சேவைகளுடன் ஆரம்பமாகும் மாணவர்களுக்கான இந்த புதிய பஸ் போக்குவரத்து சேவையில் பஸ்களின் எண்ணிக்கையை ஒரு மாத காலத்திற்குள் ஐம்பதாக அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடி மற்றும் எரிபொருள் விலை அதிகரிப்பு, பொது போக்குவரத்து சேவைகளின் கட்டண உயர்வு ஆகியவற்றை கருத்திற் கொண்டே புதிய பஸ் சேவைகளை நடைமுறைப்படுத்த தீர்மானித்துள்ளதாகவும் அமைச்சர் பந்துல குணவர்தன மேலும் தெரிவித்தார்