சிவ பெருமானுக்குரிய அஷ்ட விரதங்களில் ஒரு விரதம் பிரதோஷ விரதமாகும். சிவ பெருமான் தேவர்களுக்கு அருட்காட்சி கொடுத்து அருளிய நேரம் என்பதால் மாலை 4 முதல் 6 மணி வரையிலான காலத்தை பிரதோஷ காலம் என்கிறோம்.
இந்த நேரத்தில் மனதில் என்ன நினைத்து வெண்டிக் கொண்டாலும் அது அப்படியே நடக்கும் என்பது நம்பிக்கை. சிவனுக்குரிய வழிபாடுகளில் மிகவும் புண்ணிய பலனைத் தரக் கூடியது பிரதோஷ வழிபாடு.
இந்த பிரதோஷம் ஒவ்வொரு கிழமைகளில், மாதத்தில் வருவதற்கு ஏற்ப அதன் பலன்களும் மாறுபடும்.
அதிலும் ஆவணி மாத தேய்பிறை பிரதோஷம் என்பது மிகவும் சக்தி வாய்ந்ததாகும். பிரதோஷ வழிபாடு சிறப்பு வாய்ந்தது என்றால் சனிக்கிழமையில் வரும் பிரதோஷம் மிகவும் உயர்வானதாகும். இதனை மகா சனிப்பிரதோஷம் என்பார்கள்.
அப்படிப்பட்ட சனிப்பிரதோஷத்திற்கு இணையானது தான் செவ்வாய்கிழமையில் வரும் பிரதோஷம் ஆகும்.
திங்கட்கிழமையில் வரும் பிரதோஷத்தை சோம வார பிரதோஷம் என குறிப்பிடுவதை போல செவ்வாய்க்கிழமையில் வரும் பிரதோஷத்திற்கு ருண விமோசன பிரதோஷம் என்று பெயர்.
ருணம் என்பது நமக்கு ஏற்படக் கூடிய தீராத கடன், நீண்ட நாட்களாக இருக்கும் நோய், எதிரிகளால் ஏற்படும் பிரச்சனைகள், தொல்லைகள் இப்படிப்பட்ட ருணத்தில் இருந்து விமோசனம் அளிக்கும் பிரதோஷம் என்பதால் தான் இதனை ருண விமோசன பிரதோஷம் என்கிறோம்.
செவ்வாய்கிழமையில் வரும் பிரதோஷத்தன்று விரதமிருந்து சிவ பெருமானை வழிபடுவது மிகவும் சிறப்பானதாகும்.
அதோடு சில குறிப்பிட்ட பொருட்களை சிவாலயத்திற்கு வாங்கிக் கொடுத்தால் கழுத்தை நெரிக்கும் கடன் பிரச்சனை இருந்தாலும், நீண்ட காலமாக தீராத நோய் இருந்தாலும் தீரும். எதிரிகள் தொல்லை இனி இருக்காது.
இப்படி அனைத்து பிரச்சனைகளும் தீருவதற்கு ருண விமோசன பிரதோஷத்தன்று நந்தியம் பெருமானுக்கு அருகம்புல் மாலையாகவோ அல்லது கட்டாகவோ வாங்கிக் கொடுப்பது நல்லது.
அதோடு சிவனுக்கு அபிஷேகம் செய்வதற்கு இளநீர், பால் ஆகியனை வாங்கிக் கொடுக்க வேண்டும். அதோடு அபிஷேகத்திற்கு பிறகு நந்திக்கு அலங்காரம் செய்வதற்கு சந்தனம் வாங்கித் தர வேண்டும்.
கூடவே வெண்தாமரை கிடைத்தால் சிவனுக்கு வாங்கி கொடுக்கலாம். வெண் தாமரை கிடைக்காவிட்டால் ஏதாவது ஒரு தாமரையை வாங்கிக் கொடுக்கலாம்.
இந்த பொருட்களை வாங்கிக் கொடுத்த விட்டு நந்தி பகவானிடம் நன்றாக மனமுருகி பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும்.
சிவ பெருமானை அவருக்குரிய பதிகங்கள், மந்திரங்கள் சொல்லி வழிபட்டு, சிவ பெருமானையும் மனதார வேண்டிக் கொண்டு நம்முடைய கோரிக்கையை சொல்லி வழிபடலாம்.
இப்படி வழிபடுவதால் எப்படிப்பட்ட கடன் பிரச்சனையாக இருந்தாலும் தீர்ந்து விடும் என்பது ஐதீகம்.
அதனால் தீராத கடன் பிரச்சனையில் கஷ்டப்படுபவர்கள், நோய்களில் இருந்து விடுபட நினைப்பவர்கள் ருண விமோசன பிரதோஷத்தன்று இந்த 5 பொருட்களை வாங்கிக் கொடுத்து வழிபட்டால் நிச்சயம் பலன் கிடைக்கு