இன்று மாலை 6.00 மணியளவில், கொள்ளுபிட்டியில் வைத்து, குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரிகளால் (CID) அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
பயங்கரவாத தடுப்பு சட்ட்தின் கீழ், குறிப்பாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் அவரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக, தெரிவித்த அஜித் ரோஹண, குறித்த சட்டத்தின் கீழ் அவரை தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதேவேளை, ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் முஸ்லிம் சட்டம் தொடர்பில் அசாத் சாலி சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டதாக தெரிவிக்கும் குற்றச்சாட்டு தொடர்பில், விசாரணை செய்ய, குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் (CID) உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் தலைமையிலான 5 CID அதிகாரிகள் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக, பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர நேற்றுமுன்தினம் (14) தனது ட்விற்றர் கணக்கில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.